கடகத்தின் லக்ன ராசியாபதிபதி சந்திரனின் அம்சத்தில் பிறந்த நீங்கள் சாந்தம், சகிப்புத்தன்மை, அமைதி காக்கும் தன்மை, கலையார்வம், எல்லாவற்றிலும் பற்றுடைமை, சங்கீதம், நடனம், நாடகத்துறையிலார்வம் முதலியவை உங்களிடத்தில் மேலோங்கி நிற்கும். மேலோரிடத்தில் மரியாதையும் கடவுள் பக்தியும், நேர்மைக்கும் நீதிக்கும் தலைவணங்குவதுமான சிறந்த குணங்களை உங்களிடத்தில் காணலாம். நடுத்தரமான உயரம் கொண்ட நீங்கள் சிறுவயதில் ஒல்லியாகவும், நடுவயதிற்குமேல் உடல் பெருத்தும், உருண்டு திரண்ட அங்க அமைப்புகளும், தடித்த சரீரமுடையவர்களாகவும் காணப்படுவார்கள்.